சிலியின் எல் மான்டே நகரில் பெருக்கெடுத்த வெள்ளம்... ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு

சிலியின் எல் மான்டே நகரில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
சிலியின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது.
மலைப்பகுதிகளில் அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Comments