8ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது

0 1543

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை அரசுப்பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சஸ்பென்டாகி தலைமறைவாக இருந்த இயற்பியல் ஆசிரியர் இரண்டு மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜூன் மாதம் 8ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் அருள்ஜீவன் ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததால் சிறுவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சிறுவனின் தந்தை புகார் அளித்ததையடுத்து, குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுவனிடம் நடத்திய விசாரணையில் அருள்ஜீவன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதையடுத்து, போக்சோ சட்டத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் தற்போது அருள்ஜீவன் கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments