குடோனில் இறக்கிய 13 டன் முந்திரி மொத்தமும் மாயம் : பண்ருட்டி இளைஞர் புகார்..

”13 டன் முந்திரியை குடோனில் இறக்குனேன், விடிஞ்சு பார்த்தா மொத்தமும் காணோம், நைட்டோட நைட்டா கம்பெனியையும் காணோம்”.. லட்சக்கணக்குல ஏமாத்திட்டாங்க.. 4 வருஷமா சென்னையில சுத்திட்டு வரேன், பாத்திரம் கழுவுற அளவுக்கு போயிட்டேன், போலீஸ் ஸ்டேஷன்லயே வருஷ கணக்குல குடும்பத்துடன் அலைய வைத்ததாக இளைஞர் கண்ணீர் மல்க புகார்.
சென்னை செங்குன்றத்தில் குடோன் ஒன்றில் தாம் இறக்கி வைத்த 13 டன் முந்திரியும் வாங்கிய கம்பெனியும் இரவோடு இரவாக மாயமாகிவிட்டதாக பண்ருட்டியைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Comments