மின்கம்பத்தை அகற்றாமல் அமைக்கப்படும் மழைநீர் வடிகால்.. பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் உயரழுத்த மின் கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றாமலேயே, அதனை சுற்றி மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
அங்கு சாலையின் இரு பக்கமும் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வரும் நிலையில், சாலையோரமுள்ள 11 கிலோ வாட் உயரழுத்த மின்கம்பத்தை அகற்றாமல், அப்படியே கான்கிரீட் அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
பலமுறை புகாரளித்தும் இரவோடு இரவாக அதிகாரிகள் பணிகளை முடித்து வருவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் பகுதியில் உள்ள மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக திருவள்ளூர் மின்வாரிய உதவி இயக்குநர் தெரிவித்தார்.
Comments