அமெரிக்காவில் இந்தியத் தம்பதியும் அவர்களது 6 வயது மகனும் சடலங்களாக மீட்பு.. !!

0 63401

அமெரிக்காவில் கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது 6 வயது மகனின் உடல்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேரிலேண்ட் பகுதியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வசித்து வந்த யோகேஷ் நாகராஜப்பா - பிரதீபா அமர்நாத் தம்பதிக்கு யாஷ் ஹொன்னல் என்ற 6 வயது மகன் இருந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை துப்பாக்கிக் காயங்களுடன் மூவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மனைவியையும் மகனையும் சுட்டுக் கொன்ற பின் யோகேஷ் நாகராஜப்பா தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் நிகழ்ந்து மூன்று நாட்கள் ஆகியும் உடல்களைப் பெற முடியவில்லை என்றும், மூவரின் உடல்களையும் இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யோகேஷின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments