அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு.. உதவி செய்வது போல் நடித்து குழந்தையை கடத்திய பெண் கைது.. !!

0 1210

வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை கடத்தப்பட்ட குழந்தையை எட்டு மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.

கண்ணமங்கலத்தை சேர்ந்த சுந்தர் என்பவரின் செவி, பேச்சு திறனற்ற மனைவி சூரியகலாவிற்கு வியாழக்கிழமை அன்று குழந்தை பிறந்தது.

பிரசவ வார்டில் உதவி செய்வது போல் நடித்த பத்மா என்ற பெண், குழந்தையை கடத்தி சென்றதை சிசிடிவி பதிவு மூலம் கண்டறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

குழந்தையுடன் பத்மா பேருந்து மூலம் திருவண்ணாமலைக்கு சென்று, அங்கிருந்து காஞ்சிபுரத்திற்கு சென்றதை அறிந்த போலீசார், காஞ்சிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை பேருந்தில் ஏற முயன்றபோது பத்மாவை கைது செய்து, குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து, செய்திளாரை சந்தித்த வேலூர் மாவட்ட  பொறுப்பு கண்காணிப்பாளர் கிரன் சுருதி, குழந்தை இல்லாத பத்மா, வளர்க்கும் நோக்கத்துடன் குழந்தையை கடத்தி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments