ஆப்பிரிக்க நாடான நைஜரில் 3 ஆண்டுகளில் மீண்டும் ஜனநாயகம் மலரும் - ராணுவம் உறுதி.. !!

0 900

ஆப்பிரிக்க நாடான நைஜரில் 3 ஆண்டுகளில் மீண்டும் ஜனநாயகம் மலரும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

அதிபர் முகமது பாசும்மை அதிகாரத்திலிருந்து அகற்றி, ராணுவ தளபதி அமடோ அப்த்ரமேனே ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

அதிபர் முகமது பாசும் கதி என்ன என்பதும் குறித்து சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து பிரிச்சனைக்கு தீர்வு காணும் வகையில், நைஜர் தலைநகர் நியாமேவுக்கு வருகை வந்த மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பு நாடுகளின் பிரதிநிதிகள், ராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் 3 ஆண்டுகளில் ஜனநாயக ஆட்சியை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவ ஆட்சியாளர் அமடோ அப்த்ரமேனே உறுதி அளித்ததாக நைஜர் நாட்டின் மூத்த ராணுவ அதிகாரி சியாணி தெரிவித்தார்.

தொடர்ந்து மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள், முன்னாள் அதிபர் முகமது பாசும்மை சிறையில் சந்தித்து பேசினர். அப்போது அவரது உடல்நிலை மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளை கேட்டறிந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments