ஆந்திராவில், காதல் திருமணம் செய்த மனைவி, விவாகரத்து கோரியதால் கொலை செய்யப்பட்டார்.

0 1586

ஆந்திராவில், காதல் திருமணம் செய்த மனைவி, விவாகரத்து கோரியதால் கொலை செய்யப்பட்டார்.

கிழக்குக் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சத்யராணி என்ற அவர், அதே பகுதியைச் சேர்ந்த ராம்பாபு என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார்.

இந்த நிலையில் ராம்பாபு, தொடர்ந்து வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்ததால், சத்யராணி தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் விவாகரத்து கோரி வழக்கும் தொடுத்திருந்தார். இந்த நிலையில், கோயிலுக்கு நடந்துச் சென்று கொண்டிருந்த சத்யராணியை வழிமறித்து ராம்பாபு தகராறு செய்ததாகவும், அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து கொன்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து தலைமறைவான ராம்பாபுவை போலீஸார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments