கடலூரில் பதுங்கியிருந்த புதுச்சேரி ரௌடி வெட்டிக் கொலை.. 5 பேர் கைது, தப்பியோடிய 4 பேருக்கு வலைவீச்சு

0 1528

கடலூரில் பதுங்கியிருந்த புதுச்சேரி ரவுடியை வெட்டிக் கொலை செய்த 5 பேர் கும்பல் கைது செய்யப்பட்டது.

புதுச்சேரி முருகப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடியான முகிலன் கடலூர் அருகிலுள்ள சித்தரசூரில் பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இரவு நேரத்தில் வயல் வெளியில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த போது அவரை 9 பேர் கொண்ட ஒரு கும்பல் சுற்றி வளைத்து சரமாரி வெட்டி தலையை துண்டித்து கொலை செய்தது.

இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த போலீஸார், புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி விக்கி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு விக்கியை, முகிலன் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. எனவே, பயத்தால் பதுங்கியிருந்த முகிலனை, விக்கி கும்பல் தேடி வந்து கொலை செய்ததாக தெரிவித்த போலீஸார், தலைமறைவான மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments