தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது ரஷ்யாவின் Ka-52 ரக தாக்குதல் ஹெலிகாப்டர்
உக்ரைனில் ரஷ்ய ஹெலிகாப்டர் ஒன்று நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது. சபோரிஜியா பகுதியில் ரஷ்யாவின் Ka-52 ரகத்தைச் சேர்ந்த இரு தாக்குதல் ஹெலிகாப்டர்கள் சென்று கொண்டிருந்தன.
அப்போது வயல்வெளியில் பதுங்கியிருந்த உக்ரைனிய வீரர்கள் நடத்திய தாக்குதலில் ஒரு ஹெலிகாப்டர் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்தவர்களின் நிலை தெரியவராத நிலையில் மற்றொரு ஹெலிகாப்டர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றது. உக்ரைன் உடனான போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 41 Ka-52 ஹெலிகாப்டர்களை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
Comments