யார், என்ன விமர்சனம் செய்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

யார், என்ன விமர்சனம் செய்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் அழைப்பை ஏற்று சென்னையில் பயிற்சி மேற்கொள்ள மணிப்பூரில் இருந்து வந்துள்ள 15 வாள்வீச்சு வீரர்களை, நேரு உள்விளையாட்டு அரங்கில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, தாங்கள் நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்களும் பங்கேற்பார்கள் என்றார்.
Comments