சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதை உயரம் குறைப்பு..!

0 1320

சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவை சுற்றி வரும் வட்டப் பாதை வெற்றிகரமாக உயரம் குறைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் உந்து கலத்தில் இருந்து, விக்ரம் லேண்டர் கருவி நேற்று தனியாக பிரிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தற்போது நிலவு சுற்றுப்பாதை உயரம் குறைக்கப்பட்டுள்ளது. வரும் 20-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு, இரண்டாம் கட்ட நிலவு சுற்றுப்பாதை உயரம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அது நல்ல முறையில் செயல்படுவதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.

விக்ரம் லேண்டர் கருவி நிலவின் தென் துருவத்தில் வரும் 23-ம் தேதி சாஃப்ட் லேண்டிங் செய்யப்பட்டவுடன், அதிலிருந்து பிரக்யான் ரோவர் என்ற கருவி நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும். இதனிடையே, விக்ரம் லேண்டர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட நிலவின் க்ளோஸ்-அப் காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments