மீனவரின் இல்லத்துக்கு நேரில் சென்று, மீன்பிடித் தொழில் குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர் ஒருவரின் இல்லத்துக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பேராவூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் தங்கு விடுதிக்கு திரும்பினார்.
அப்போது அக்காள்மடம் சேதுபதி நகர் பகுதியில் சாலை ஓரமாக மீனவர் மரிய ஹெட்சன் என்பவர் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்க நின்று கொண்டிருந்தார்.
இதனைக்கண்ட மு.க.ஸ்டாலின் உடனடியாக வாகனத்தில் இருந்து இறங்கி மீனவர்களிடம் மீனவர் நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வந்து சேர்கிறதா என கேட்டறிந்தார்.
பின்னர் மீனவர் மரிய ஹெட்சன் இல்லம் சென்ற ஸ்டாலின், அவரது குடும்பத்தாரிடம் மீன்பிடி தொழில் குறித்தும், மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்ப படிவங்கள் பதிவு செய்தீர்களா என்றும் கேட்டறிந்தார்.
Comments