காதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததை கண்டித்ததால் பாட்டி, அத்தையை கழுத்தறுத்து கொன்ற கல்லூரி மாணவன் கைது

0 5486

மதுரையில், காதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததை கண்டித்த பாட்டி மற்றும் அத்தையை கொலை செய்த கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டார்.

எல்லீஸ் நகரில் ஒரே வீட்டில் மாமியார் மகிழம்மாள் அவரது மருமகள் அழகுப்பிரியா ஆகியோர் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கிடைத்த தகவலில் போலீஸார் அங்குச் சென்று சடலங்களை மீட்டனர்.

விசாரணையில், கீழமாத்தூர் பகுதியைச் சேர்ந்த குணசீலன் என்பவர் தனது தாய் வழி பாட்டியான மகிழம்மாள் வீட்டில் தங்கியிருந்து படித்து வந்துள்ளார்.

அப்போது, காதலி எனக் கூறி, இளம்பெண் ஒருவரை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வந்ததை மகிழம்மாள் மற்றும் குணசீலனின் அத்தை அழகுப்பிரியா ஆகியோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, ஏற்பட்ட வாக்குவாதத்தில், நண்பன் ரிஷி என்பவருடன் சேர்ந்து மகிழம்மாள் மற்றும் அழகுப்பிரியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். குணசீலன் மற்றும் ரிஷியை எஸ்.எஸ் காலனி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments