கீழடி அகழாய்வு குறித்த ஆய்வறிக்கையை வெளியிடும் போது 1100 ஆண்டுகால வரலாறு தெரியவரும் - இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர்

0 4414

மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட கீழடி அகழாய்வு குறித்த ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிடும் போது கீழடியின் ஆயிரத்து நூறு ஆண்டுகால வரலாறு தெரியவரும் என்று இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பிரிவு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கில் பேசிய அவர், கீழடி நகரம் அழிவதற்கு இயற்கை சீற்றங்கள் காரணமல்ல, கி.பி.1000 வரை அந்நகரம் இருந்திருக்கலாம் என்றார்.

தொல்லியல் பொருட்களை கார்பன் பகுப்பாய்வு செய்து அதன் காலத் தொன்மையை கண்டறிய குறிப்பிட்ட பொருட்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்திலேயே கார்பன் பகுப்பாய்வு செய்வதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த, தமிழக அரசு அண்ணா பல்கலையுடன் சேர்ந்து முயற்சி எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments