நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல்

0 977


நாங்குநேரியில் வீடு புகுந்து பள்ளி மாணவனும் அவரது தங்கையும் சக மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை பள்ளி கல்வித்துறை இயக்குனரிடம் தாக்கல் செய்யப்பட்டது.

தாக்குதலில் காயமடைந்த இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு நேரில் விசாரணை மேற்கொண்டார்.

அதனடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தாக்கல் செய்த முதற்கட்ட அறிக்கையில், பள்ளியில் மாணவருக்கு நடைபெற்ற சாதிய கொடுமைகள் குறித்து விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

மாணவனையும் அவரது சகோதரியையும் விடுதியுடன் கூடிய வேறு பள்ளியில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கவும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments