'அல்-ஹிலால்' கிளப்பில் இணைந்தார் பிரேசில் வீரர் நெய்மர்.. 2 ஆண்டுகள் விளையாட ரூ.2,500 கோடிக்கு ஒப்பந்தம்..!

0 1649

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர், சவுதி அரேபியாவின் அல் ஹிலால் கால்பந்து கிளபிற்காக 2 ஆண்டுகள் விளையாட இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

31 வயதான நெய்மர் கடந்த 6 ஆண்டுகளாக பிரான்ஸின் பி.எஸ்.ஜி. அணிக்காக விளையாடி வந்தார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவரை அல் ஹிலால் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக அவருக்கு இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் வழங்கவும், அவரை விடுவிப்பதற்காக  பி.எஸ்.ஜி. கிளப்பிற்கு 850 கோடி ரூபாய் வழங்கவும் அல்-ஹிலால் சம்மதம் தெரிவித்துள்ளது. ரொனால்டோ, பென்சிமா, நெய்மர் என ஏராளமான நட்சத்திர வீரர்கள் ஐரோப்பிய கிளப்புகளில் இருந்து விலகி சவுதி அரேபியா  கிளப்புகளில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments