ஜெயிலர் பார்த்த உற்சாகம்.. கோடிகளை கொட்டத் தயாராகும் லெஜண்ட் அண்ணாச்சி.. சினிமாவின் ஆழத்தை பார்க்க முடிவு..!

0 7104

ஜெயிலர் படம் பார்த்த உற்சாகத்தில், குழந்தைகளுடன் ஆட்டம் போட்ட லெஜண்ட் சரவணன், மீண்டும் பல கோடிகளை கொட்டி புதிய படத்தில் நடிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது...

சினிமாவை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன் என்று புதிய கெட்டப்பில் களமிறங்கி உள்ள சரவணா ஸ்டோர் உரிமையாளர் லெஜண்ட் சரவணன், ஜெயிலர் படம் பார்த்த உற்சாகத்தில் குழந்தைகளுடன் ஆட்டம் போட்ட காட்சிகள் தான் இவை..!

தனது புதிய படத்திற்காக லேசான தாடி மீசையுடன் புதிய கெட்டப்புக்கு மாறி உள்ள லெஜண்ட் சரவணன். சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தைகளை சந்தித்து பரிசுகள் வழங்கி அவர்களுடன் உற்சாகமாக உரையாடினர்

எப்போதும் பிரமாண்டத்தை நம்பும் லெஜண்ட் இந்த முறை பிரமாண்டத்துடன் நல்ல கதை களத்தை தேர்வு செய்துள்ளதாகவும், பிரபல  இசையமைப்பாளர், இளம் இயக்குனர் மற்றும் இளம் டெக்னீசியன்களுடன் கரம் கோர்த்து புதிய படத்தை தயாரித்து நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.  குழந்தைகளையும் இளைஞர்களையும் கவரும் வகையில் கதையம்சம் கொண்ட அந்த படம் தனக்கு மிகப்பெரிய வெற்றியை தரும் என்று நம்புகிறார்.

அடுத்தவர்கள் பணத்தில் பஞ்ச் அடித்து படத்தை பஞ்சராக்கி வீட்டில் முடங்கிக் கிடக்கும் நடிகர்கள் மத்தியில் , தனது உழைப்பின் ஒரு பகுதி வருமானத்தை கொண்டு சொந்தமாக படம் தயாரித்து சினிமாவின் ஆழத்தை அறிய முற்படும் லெஜண்ட் ... நெட்டிசன்களுக்கு ட்ரோல் மெட்டீரியலாக தெரிந்தாலும், தமிழ் திரை உலகினருக்கு எப்போதும் வியப்புத்தான்..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments