பிளாட்பார்ம் டிக்கெட் நஹி.. இந்தி நஹி.. தமிழ் மட்டும்... பளார் விட்ட பெண் ஆபீசர்..!

0 5994

பெரம்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார டிக்கெட் இல்லாமல் சிக்கிக் கொண்ட வட மாநில இளைஞரை பெண் டிக்கெட் பரிசோதகர் கன்னத்தில் அறைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பிளாட் பார்ம் டிக்கெட் எடுக்காத இளைஞரை டிக்கெட் பரிசோதகர் கன்னத்தில் அறைந்த காட்சிகள் தான் இவை..!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடை முடியும் இடத்தில் செவ்வாய் கிழமை காலையில் வட மாநில இளைஞர் ஒருவர் நின்றிருந்ததாக கூறப்படுகின்றது.

அப்போது அங்கு பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் அக்ஷயா அந்த இளைஞரிடம் பிளாட் பார்ம் டிக்கெட் கேட்டார், அந்த இளைஞரோ தான் ரயில்வே எல்லையை ஒட்டிய பகுதியில் தான் நின்றதாகவும், தன்னிடம் அபராதம் செலுத்துவதற்கு பணம் ஏதும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த இளைஞரை டிக்கெட் பரிசோதகர்கள் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்துள்ளார்.

வடமாநில இளைஞர் வாக்குவாதம் செய்ய ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர் அக்ஷயா , இது எங்க ஊரு நான் இந்திலாம் பேச முடியாது எனக்கூறியதோடு, ஆவேசமாக எழுந்து அந்த இளைஞரை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பானது

ரயில் பயணி ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments