முதியவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒன்றும் தெரியாதவன் போல் புகாரளித்த மகனை காட்டிக்கொடுத்த ஆடியோ

0 2176

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முதியவர் கொலையில் சொத்துகளை பிரித்துக் கொடுக்காததால், அவரது மகனே அடித்துக் கொன்றுவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல் போலீசிடமே நாடகமாடியது தெரியவந்துள்ளது.

எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த ராமு என்ற அந்த முதியவர் கடந்த மாதம் 24ஆம் தேதி தனது வீட்டருகே காயங்களுடன் இறந்து கிடந்தார். தனது தந்தையை யாரோ அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது மகன் புருஷோத்தமன் போலிசில் புகாரளித்துள்ளார்.

விசாரணையில் இறங்கிய போலீசார், ராமுவின் குடும்பத்தினர் அனைவரது செல்போன் அழைப்புகளையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது புருஷோத்தமன், தனது தந்தையை அடித்துக் கொன்றது குறித்து மனைவியிடம் பேசிய 20 நிமிட ஆடியோ சிக்கியது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

ராமுவின் உடலை போலீசார் கைப்பற்றச் சென்ற அன்று, புருஷோத்தமன் ஒன்றும் தெரியாதவர் போல் டி.எஸ்.பியிடம் பேசிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments