இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க 19வது சுற்றுப் பேச்சுவார்த்தை..!

0 781

இந்தியா சீனா இடையிலான ராணுவ மட்டத்தில் 19 வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

எல்லையில் சீனப் படைகள் குறைப்பதற்காக இந்தியாவின் இடைவிடாத முயற்சியின் ஒருபகுதியாக லடாக்கின் சூசுல் பகுதியில் நேற்று இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் சந்தித்துப் பேச்சு நடத்தினர். காலை 9.30 மணிக்குத் தொடங்கி, மாலை 5.30 மணிக்கு பேச்சுகள் நிறைவு பெற்றன.

இந்தப் பேச்சுவார்த்தையின் விவரங்கள் ஓரிரு நாளில் கூட்டு அறிக்கையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஜி 20 மாநாட்டின் இடையே சந்திக்க உள்ளார். அதற்கு முன்னதாக வருகிற 22 முதல் 24ம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டிற்கு மத்தியிலும், இரு தலைவர்களும் சந்திக்க உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments