மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: தூத்துக்குடி ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் கடற்கரை கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்க கடந்தாண்டு தமிழக அரசு 58 கோடி ரூபாய் ஒதுக்கியதாக கூறப்படுகிறது.
எனினும், பணிகள் துவங்கப்படாததை கண்டித்து இரண்டாவது முறையாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டம் 8ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மீனவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
Comments