ரூ.300 கோடி வசூலை தாண்டிய ஜெயிலர்.. உலக அளவில் அலப்பறை..!

0 3560

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாகி 4 நாட்களில் உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயிலர்..... தமிழ் சினிமாவின் பெருமையை உலக அளவில் தூக்கி நிறுத்தி இருப்பதாக திரைவிமர்சகர்கள் பாராட்டும் வகையில் வசூலை வாரிகுவித்து வருகிறது.

முதல் இரண்டு வேலை நாட்களிலும் அடுத்த இரு விடுமுறை நாட்களிலும் ஜெயிலர் படத்தைப் பார்க்க திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது

தமிழகத்தில் மட்டும் 110 கோடி ரூபாயை தொட்ட ஜெயிலர், கர்நாடகாவில் 32 கோடி, ஆந்திர தெலுங்கானாவில் 32 கோடி, கேரளாவில் 23 கோடி, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் 11 கோடி , வெளி நாடுகளில் மட்டும் 138 கோடி ரூபாயை அள்ளி 4 நாட்களில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை தாண்டி பாக்ஸ் ஆபீஸில் முதல் இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலை நாளான திங்கட்கிழமையும் அட்வான்ஸ் புக்கிங்கில் ஜெயிலர் சாதனை படைத்து வரும் நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழாவையொட்டி பெங்களூரில் கூடுதல் காட்சிகள் திரையிடப்படுவதாகவும், வெளி நாடுகளில் சிரஞ்சீவியின் போலா சங்கர் வெளியிடப்பட்ட திரையரங்குகளில் ஜெயிலர் திரையிடப் பட்டுள்ளதாக கூறும் திரை உலகினர் உலக அளவில் ஜெயிலர் தமிழ் சினிமாவின் பெருமையை உயர்த்திப்பிடித்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments