மதுரையில் இந்திய வரைபடம் வடிவில் நின்று 2,023 பள்ளி மாணவர்கள் நடனம்...

0 4101

நாட்டின் 76வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு மதுரையில் தனியார் அமைப்பு சார்பில் ஒயிலாட்டம் நடைபெற்றது.

76வது சுதந்திரத்தை குறிக்கும் வகையில் இந்திய வரைபடத்தில் 76 என்ற எண் வடிவில் நின்று 2023 மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து கிராமிய பாடலுக்கு ஒயிலாட்டம் ஆடி சாதனை முயற்சி மேற்கொண்டனர்.

இதற்கிடையில், கோவையைச் சேர்ந்த 10வயது மாணவி கால்களில் செருப்பாணி அணிந்து கரகாட்டம் ஆடியும், 8 வயது மாணவன் இடுப்பில் ஒரு நிமிடத்தில் 220 முறை வளையத்தை சுற்றியும் சாதனை முயற்சி மேற்கொண்டனர்.

இவை அனைத்தையும் international pride world records என்ற அமைப்பு சாதனையாக அங்கீகரித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments