சுதந்திர தினத்தையொட்டி அஞ்சலகங்களுக்கு விற்பனைக்கு வந்த தேசியக்கொடிகள்.. இணையதளத்தில் முன்பதிவு செய்தால் கொடிகள் வீடு தேடி வரும்.. !

76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள தபால் நிலையங்களில் 4 லட்சத்து 50 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனைக்கு வந்துள்ளன.
20 அங்குல நீளம், 30 அங்குல அகலத்தில் சில்க் துணியால் தயாரிக்கப்பட்டுள்ள தேசியக் கொடி, அண்ணாசாலை உள்ளிட்ட 12 அஞ்சலகங்களில், 25 ரூபாய்க்கு கிடைக்கும்.
indiapost இணையதளம் மூலம் முன்பதிவு செய்தால், அஞ்சலக ஊழியர்கள் மூலம் கொடிகள் வீடு தேடி வரும். ஒருவர் எத்தனை கொடிகள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம், வரும் 13-ம் தேதி வரை விற்பனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments