சிறு வாய்ப்பு கிடைத்தாலும் தமிழக மாணவர்கள் தூள் கிளப்பிவிடுவார்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிறிய வாய்ப்புக் கிடைத்தாலும் தமிழக மாணவர்கள் அடித்துத் தூள் கிளப்புவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் பயின்று, நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் போன்றவற்றில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அப்போது பேசிய முதலமைச்சர், அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்பதாகவும், அரசு ஏற்படுத்தித் தரும் வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், முதன்மைக் கல்வி நிறுவனங்களில் பயில தேர்வானவர்கள், வரும் ஆண்டுகளில் உயர்கல்விகளில் சேர உள்ள மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
தனது சிறிய கிராமத்தில் இருந்து தருமபுரிக்குச் செல்வதே தனக்குப் பெரும் கனவாக இருந்ததாகவும், கல்வி என்னும் ஆயுதத்தால், தற்போது கடல் கடந்து படிக்க செல்லவிருப்பதாகவும் மாணவி ஒருவர் பேசினார்.
Comments