நிலவைச் சுற்றிவரும் சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை மேலும் குறைப்பு ... ஆக.23இல் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ திட்டம்

0 1934

நிலவைச் சுற்றி சந்திரயான்-3 விண்கலம் பயணித்து வரும் நிலையில், இரண்டாவது முறையாக அதன் சுற்றுப் பாதையைக் குறைக்கும் நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 திட்டமிட்டபடி பயணித்து வருகிறது. கடந்த 6-ஆம் தேதியன்று, நிலவின் முதல் சுற்றுப்பாதை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் அடுத்தச் சுற்றுப்பாதை குறைக்கப்பட்டது.

படிப்படியாக அடுத்தச் சுற்றுகள் குறைக்கப்பட்டு, வரும் 23ஆம் தேதியன்று நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-3 லேண்டரை தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த சுற்றுப்பாதை குறைக்கும் நடவடிக்கை, வரும் 14ஆம் தேதி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments