அந்த பிஞ்சுக்கு 7 வயசு தான்.. கடித்து குதறிய காமுகன்.. சுவற்றிடுக்கில் சிக்கியவனுக்கு அடி உதை..!
சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டு விட்டு தப்பி ஓடிய ஆசாமி ஒருவன் சுவர் இடுக்கில் புகுந்த போது உடல் மாட்டிக்கொண்டதால் விரட்டி வந்த பொதுமக்களிடம் வசமாக சிக்கினான்.
பழனி அருகே சிறுமியை சீண்டிவிட்டு தப்பி ஓடிய போது கதவிடுக்கில் சிக்கிய திருட்டு பூனை போல சுவர் இடுக்கில் சிக்கிய சில்மிஷ பூனை இது தான்..!
அங்கு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை துக்கிச்சென்ற முருகன் அத்துமீறலில் ஈடுபட்டதால், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தேடிய போது, உடலில் பல இடங்களில் காயங்களுடன் சிறுமி மீட்கப்பட்டார்.
இதற்கு காரணமானவனை விரட்டிச்சென்ற பொது மக்கள் சுற்று போட்டனர். இரு சுவற்றுக்கு இடையே உள்ள சிறிய இடைவெளியில் புகுந்து தக்க சுவற்றின் இடுக்கில் புகுந்த அவனால் முழுமையாக செல்ல இயலாமல் இடுக்கில் சிக்கிக் கொண்டான், அப்படியே வைத்து தர்ம அடி கொடுத்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் முருகனை இழுத்துப்பிடித்து வெளியே மீட்டனர். பின்னர் அவனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். உடலில் காயங்களுடன் இருந்த சிறுமியை பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
முருகன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி முருகனை சிறையில் அடைத்தனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் வீதிக்கு விளையாடச்சென்றாலும் மிகுந்த கவனத்துடன் கண்காணிக்க வேண்டியது அவசியம்.
Comments