டெல்லி நிர்வாக திருத்த மசோதா - மாநிலங்களவையில் இன்று தாக்கல்செய்கிறார் அமித் ஷா.!

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட டெல்லி அதிகாரிகள் தொடர்பான மசோதாவை இன்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்கிறார்.
இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களைப் பறிப்பதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினரின் கூட்டமைப்பான இந்தியாவும் மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவு அளிப்பதாக கூற முடியாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மாநில அரசு யூனியன் பிரதேச அரசுகளுக்கு இடையில் வேறுபாடு உள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சிகளின் போதும் கூட அதிகாரிகள் தொடர்பான அதிகாரம் டெல்லி முதலமைச்சர்களிடம் இருந்ததில்லை என்று பாஜக தனது தரப்பை நியாயப்படுத்தியுள்ளது.
Comments