என்.எல்.சி.,யில் ஓவர்மேன், சர்வேயர், சர்தார் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு.. வீடு அல்லது நிலம் கொடுத்த குடும்பத்தை சேர்ந்த நபர்களுக்கு சலுகை.. !!

0 2585

நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்காக வீடு அல்லது நிலம் கொடுத்த குடும்பத்தை சேர்ந்த நபர்களுக்கு ஆட்சேர்ப்பு சலுகையாக முதன்முறையாக தேர்வில் 20 மதிப்பெண் வழங்கி அதனடிப்படையில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

என்எல்சி நிறுவனத்திற்கு சர்வேயர், சர்தார் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

இந்த பணியிடங்களுக்கு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 147 நபர்களுக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் 39 பேர் என்எல்சி நிறுவன திட்டத்திற்காக வீடு அல்லது நிலம் கொடுத்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு அல்லது நிலம் கொடுத்ததற்காக சலுகை மதிப்பெண் அடிப்படையில் பணி ஆணை பெற்ற 39 பேரும், கடந்த 4-ம் தேதி முதல் என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர பணியில் சேர்ந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments