குமரி மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் தவிப்பு.. புத்தன் அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை விரைந்து முடிக்க இ.பி.எஸ்.வலியுறுத்தல்

0 1157

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீரின்றி பயிர்கள் கருகி வருவதால் உடனடியாக மாவட்டம் முழுவதும் அனைத்து கால்வாய்களையும், குளங்களையும் தூர் வாரி நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தி.மு.க. ஆட்சியில், மாவட்டத்தில் எவ்விதமான தூர்வாரும் பணிகளும் நடைபெறாததால், கடந்த ஆண்டு 14 ஆயிரத்து 250 ஏக்கரில் மட்டுமே வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த ஆண்டு அப்பரப்பு மேலும் குறைந்து சுமார் 10 ஆயிரத்து 500 ஏக்கரில் மட்டும் பாசனப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நாகர்கோவில் மாநகருக்கு 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படும் நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments