பூமிக்கு முதல் தகவலை அனுப்பியது சந்திரயான்-3 விண்கலம்

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் பூமிக்கு முதல் தகவலை அனுப்பியுள்ளது.
ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், புவியின் சுற்றுவட்ட பாதையில் 5 கட்டங்களாக உயர்த்தப்பட்டது. புவி வட்டத்தின் இறுதி சுற்றுப்பாதையை நிறைவு செய்த சந்திரயான்-3 விண்கலம், ஆகஸ்டு 1-ம் தேதி நிலவின் நீள் வட்டப் பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கியது.
இந்நிலையில், நேற்று இரவு 7.15 மணியளவில் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சந்திரயான் - 3 வெற்றிகரமாக உந்தித்தள்ளப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக நிலவின் சுற்றுப்பாதையை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை இன்று இரவு 11 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதனிடையே, நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்துள்ள சந்திரயான் 3 விண்கலம், சந்திர ஈர்ப்பு விசையை உணருவதாக முதல் தகவலை அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 23-ம் தேதி, நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கருவியை சாஃப்ட் லேண்டிங் செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments