இன்று தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு..!

0 1018

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழகம் வருகிறார்.

டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மைசூர் சிங்காரா விமானப்படை தளத்திற்கு செல்லும் முர்மு, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு 3.45 மணிக்கு மசினகுடி சென்றடைகிறார்.

முதுமலைப் புலிகள் காப்பகத்தை பார்வையிடும் அவர், தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்குச் சென்று ஆஸ்கர் விருது பெற்ற தம்பதிகள் பொம்மன் மற்றும் பெள்ளியை சந்தித்துப் பேசுகிறார்.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு மைசூரு சென்றடைகிறார். மைசூரில் இருந்து புறப்பட்டு இந்திய விமானப்படை விமானம் மூலம் இரவு 7 மணியளவில் சென்னை வரும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, நாளை சென்னை  பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ள 165-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் முர்மு, 7-ம் தேதி காலை புதுச்சேரிக்கு செல்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments