ஹரியானாவில் வன்முறை பாதித்த பகுதிகளில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை ரத்து.. !!

0 1022

ஹரியானாவில் வன்முறை பாதித்த பகுதிகளில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை ரத்து செய்யப்பட்டது.

வீட்டிலேயே நமாஸ் செய்ய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில் நூஹ், குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் மசூதிகளுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நூஹ் மாவட்டத்தில் கடந்த 31-ம் தேதி ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

வன்முறை தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே நூஹ், பிவானி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அவ்வப்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

பதற்றம் நிறைந்த பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதுடன், பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments