உலக வங்கியின் 11 இயக்குனர்கள் குழு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு.. இந்தியாவின் வளர்ச்சிக்கும் அரசியல் தலைமைக்கும் பாராட்டு..!

0 7327

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்காக அனைத்துத் தனியார் துறைகளிலும் மிக வேகமான வளர்ச்சி காணப்படுவதாக டெல்லி வந்துள்ள உலகவங்கி குழுவினர் மத்திய அரசுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

உலக வங்கியின் குழுவைச் சேர்ந்த 11 நிர்வாக இயக்குனர்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.95 நாடுகளை பிரதிபலிக்கும் உலக வங்கி அமைப்பின் இக்குழுவினர் மும்பை அகமதாபாத் லக்னோ உள்ளிட்ட இடங்களுக்குப் பயணித்து டெல்லி வந்துள்ளனர்.

டிஜிட்டல் தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப்ஸ் எனப்படும் உள்நாட்டு தொழில் வளர்ச்சி, பொதுமக்களுக்கான குடிநீர் மின்சாரம் சாலை கட்டமைப்பு போன்ற வசதிகள் என்று இந்தியா அடைந்த வெற்றியை குறித்து அவர்களிடம் நிர்மலா சீதாராமன் கோடிட்டு காட்டினர்.

இந்தியாவின் அரசியல் தலைமையின் தெளிவும் தொலைநோக்கும் குறித்து உலக வங்கிக் குழு திருப்தி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments