லிவ்விங்-டூ-கெதராக வாழ்ந்து ரூ.30 லட்சம், 30 சவரனை வாங்கி மோசடி.. வங்கி ஊழியர் மீது பெண் அதிகாரி குற்றச்சாட்டு.. !
லிவ்வீங்-டூ-கெதராக வாழ்ந்து 30 லட்சம் ரூபாய் பணம், 30 சவரன் நகைகளை மோசடி செய்துவிட்டதாக சென்னையைச் சேர்ந்த வங்கி ஊழியர் மீது மதுரையைச் சேர்ந்த பெண் அதிகாரி, மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், 2014இல் சென்னையில் தங்கி, வங்கிப் பணிக்கு தயாராகி வந்துள்ளார். அப்போது அவருடன் படித்த சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ராஜூ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரைப் பார்க்க, ராஜூ மதுரைக்குச் சென்று வீட்டின் சுவரில் ஏறிக் குதித்து, அவரது கணவனிடம் மாட்டிக் கொண்டார்.
இதனால், அந்த பெண் அதிகாரி, கணவனை பிரியும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து வங்கிப் பணி கிடைத்து பெங்களூர் சென்ற அவர், 2019இல் ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்தபோது, ராஜூவை சந்தித்துள்ளார்.
அப்போது இருவருக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்டு, லிவ்விங்-டூ-கெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி ராஜூ அடிக்கடி பணம், நகைகளை வாங்கியதாகவும், திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டிவிட்டு, 2021 ஆம் ஆண்டில் வெறொரு பெண்ணை மணம் முடித்துவிட்டதாகவும் அந்த பெண் அதிகாரி குற்றஞ் சாட்டியுள்ளார்.
Comments