டாஸ்மாக் கடைக்குள் புகுந்து 2 ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு.. பணம், மதுபானங்களையும் கொள்ளையடித்துச் சென்ற கும்பல்.. !!

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளத்தில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து 2 ஊழியர்களை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
அங்குள்ள டாஸ்மாக் கடையில் பணவடலி சத்திரத்தை சேர்ந்த பால்துரை, வன்னி கோணந்தலைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று இரவு கடையை அடைக்கும் நேரத்தில் வந்த ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
பணம் கொடுக்க மறுக்கவே ஊழியர்களை அந்த கும்பல் வெட்டி விட்டு சிறிது பணம் மற்றும் மதுபானங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. காயமடைந்த இரண்டு ஊழியர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்த போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. கொள்ளையடிக்கும் நோக்கிலா அல்லது முன்விரோதத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Comments