சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்த இந்திய பெண்மணி உயிரிழப்பு.. !!

0 2771

மலேசியாவின் பினாங் நகரிலிருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்த இந்திய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ் என்ற சொகுசு கப்பலில், இந்திய தம்பதிகளான 70 வயதான ஜகேஷ் சஹானியும், அவரது மனைவி 64 வயது ரீட்டா சஹானியும் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

பினாங்கில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் வழியில், தனது மனைவியை அறையில் இருந்து காணவில்லை என கணவர் ஜகேஷ் கப்பல் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

கப்பலில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம், ரீட்டா சஹானி சிங்கப்பூர் ஜலசந்தியில் விழுந்தது தெரியவந்துள்ளது. ரீட்டா சஹானிக்கு நீச்சல் தெரியாது என்பதால் அவர் உயிரிழந்து இருக்கலாம் என்று அவரது மகன்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உடலை தேடும் பணியிலும், சட்ட நடைமுறைகளிலும் உதவ, ரீட்டா சஹானியின் குடும்பத்துடனும், சிங்கப்பூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாக சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments