2 வழித்தடங்களில் பேருந்து சேவையை தொடங்கி வைத்து, சிறிது தூரம் பேருந்தை இயக்கிய அமைச்சர் சி.வி.கணேசன்.. !!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நரசிங்கமங்கலம் கிராமத்தில் இருந்து, விருத்தாச்சலம், மற்றும் பெண்ணாடம் வழித்தடங்களில், 2 புதிய அரசு பேருந்து சேவையை தொடங்கி வைத்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சிறிது தூரம் பேருந்தை இயக்கினார்.
இறையூர் கிராமத்தில் அமைய உள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். திட்டக்குடியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 40 கோடியே 43 லட்ச ரூபாய் மதிப்பில் 6 ஆயிரத்து 313 பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினார். கடன் உதவிகளை பெற்ற இசைக்கலைஞர்கள் இசையால் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
திட்டக்குடி தொகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உப்பு கலந்த குடிநீர் அதிகம் பயன்படுத்துவதால் குறைந்த வயதில் பலர் இறந்து விடுவதாகவும், இதனால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும், கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜை, அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
Comments