பழனி முருகன் கோயிலில் செல்ஃபி புள்ளையால் அசிங்கப்பட்ட தந்தை..! காட்டிக் கொடுத்த சி.சி.டி.வி

0 3701

பழனி தண்டாயுதபாணி கோவிலில் சாமி கும்பிடச் சென்ற போது தனது மகளை கோவில் ஊழியர் பிடித்து தள்ளி அத்துமீறியதாக, தந்தை ஒருவர் குரல் பதிவு மூலம் புகார் தெரிவித்த நிலையில், அவர் போலியான புகார் தெரிவித்திருப்பது சிசிடிவி காட்சிகளால் அம்பலமாகி உள்ளது.

பழனி தண்டாயுதபாணி கோவிலில் தனது மகளை கோவில் ஊழியர் பிடித்து தள்ளியதாகவும், அவர் மீது போக்சோ வழக்கு பதிய வேண்டும் என்றும் செந்தில் குமார் என்பவர் பரபரப்பு புகார் கூறி இருந்தார் ..!

100 ரூபாய் கட்டணம் செலுத்தி தரிசனத்துக்கு சென்ற தங்களை வேகமாக வெளியேற்றியதாகவும், தனது மகளை பிடித்து தள்ளியதாகவும், தட்டிக்கேட்ட தன்னிடம் தனது மகள் செல்போனில் சுவாமியை படம் எடுத்ததாக கூறி டெம்பிள் சிவா என்ற அந்த நபர் எகிறியதாகவும், கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

கோவிலுக்குள் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் செந்தில்குமாரின் மகள் செல்போன் மூலம் மூலவரை படம் பிடித்துக்கொண்டிருந்ததையும், அதனை அந்த ஊழியர் தடுத்து செல்போனை பறிக்க முயன்ற காட்சிகளும் சிசிடிவியில் இடம் பெற்று இருந்தது

அந்த ஊழியர் தன் மகள் மீது கை வைத்து தள்ளியதாகவும், அவருக்கு பின்னால் வந்தவர்களுக்கு மாலை மரியாதை வழங்கப்பட்டதாக கூறியதும் பொய் என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமானது.

போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் பெண்களை பாதுகாப்பதற்கு தானே தவிர யாரையும் பழிவாங்குவதற்கு அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும் என்கின்றனர் காவல்துறையினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments