மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க ஒப்புதல் தருமாறு மணிப்பூர் முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளவர்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்க அனுமதி வழங்குமாறு மணிப்பூர் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முகாம்களில் 50,000-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளதாகவும், அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகள் அதிகரித்து வருவதாகவும் கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான நேரத்தில், தார்ப்பாய், படுக்கை விரிப்புகள், கொசுவலைகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள், பால் பவுடர் போன்ற பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Comments