பூமியின் சுற்றுவட்டப் பாதையை நிறைவு செய்த சந்திரயான்-3.. நிலவின் நீள்வட்டப் பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கியது..!!

0 1218

நிலவை ஆராய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், பூமியின் சுற்றுவட்டப் பாதையை நிறைவு செய்து, நிலவின் நீள்வட்டப் பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது.

ஜூலை 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் ஒவ்வொரு கட்டமாக உயர்த்தும் பணிகள் படிப்படியாக நடைபெற்று வந்தன.

கடந்த 15-ம் தேதி, பூமியின் முதல் சுற்றுவட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், 25-ம் தேதி 5-வது சுற்றுவட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்டது.

புவி வட்டத்தின் இறுதி சுற்றுப் பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்த சந்திரயான்-3 விண்கலம், நிலவின் நீள் வட்டப் பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது.

புவி வட்ட பாதையிலிருந்து விண்கலத்தை நிலவு வட்டப்பாதைக்குள் நகர்த்தும் டிரான்ஸ் லூனர் எனப்படும் நிலைக்கு, நள்ளிரவு 12 முதல் 1 மணிக்குள் உந்துவிசை வெற்றிகரமாக அளிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதன் அடுத்தக்கட்டமாக, வரும் 5-ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலம் உந்தித் தள்ளப்படும் என்று கூறியுள்ளது.

5-ம் தேதி முதல் நிலவின் சுற்று வட்டபாதைக்குள் பயணிக்கப் போகும் சந்திராயன்-3 விண்கலம், ஆகஸ்டு 23-ம் தேதி மாலை, அதன் லேண்டர் கருவியை நிலவின் மேற்பரப்பில் மெதுவாக தரையிறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments