சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
டெல்லி அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பான அவசர சட்டம்.. மக்களவையில் தாக்கல் செய்கிறார் அமித்ஷா.. !!

டெல்லி சேவைகள் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தாக்கல் செய்கிறார்.
டெல்லி நிர்வாகத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் அதிகாரிகள் நியமனம் இடமாற்றம் போன்றவற்றின் அதிகாரம் மாநில அரசுக்கு உரியது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதனையடுத்து மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்து அதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரத்தை நிறுவுவதற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்ட ஆளும் ஆம் ஆத்மி கட்சி முயன்று வருகிறது. இந்நிலையில் மசோதாவின் சில பிரிவுகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
Comments