மகாராஷ்டிராவில் பாலம் கட்டும் பணியில் ராட்சத கிரேன் சரிந்து விபத்து.. 17 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு .. !!

0 1227

மகாராஷ்டிராவில் சம்ருத்தி அதிவேக நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணியின்போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தானே மாவட்டம் ஷாஹாபூரில் நிகழ்ந்த இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

நெடுஞ்சாலைகள், ரயில் பாலங்கள் மற்றும் பெரியக் கட்டடங்களுக்கான இரும்புத் தூண்களை நகர்த்த உதவும் ராட்சத கிரேனை இயக்கியபோது, கிரேன் சரிந்துள்ளது.

உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ள பிரதமர் மோடி, தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மராட்டிய மாநில அரசும் அறிவித்திருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments