மத்தியப் பிரதேசத்தில் பெண் மருத்துவரிடம் அத்துமீறியவனை நையப்புடைத்த பொதுமக்கள்.. !!

0 1227

மத்தியப் பிரதேசம் உஜ்ஜைன் நகரில் பெண் மருத்துவரை மானபங்கப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹித்தேஷ் என்பவனுக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெண்ணைத் தாக்கியவர்களை அவருடைய உறவினர்கள் பிடித்து அடித்து உதைத்தனர்.

பெண் மருத்துவரை மானபங்கப்படுத்தியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் உயர் அதிகாரிகள் அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments