இன்னும் ஓரிரு வாரங்களில் ரஷ்யாவின் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் - ஜெலன்ஸ்கி

0 8882

ரஷ்யா தொடங்கி வைத்த யுத்தம் படிப்படியாக ரஷ்யாவுக்கே திரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அது இயல்பானது, தவிர்க்க முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.

மாஸ்கோ மீது உக்ரைனின் மூன்று டிரோன்கள் தாக்குதல் நடத்தியதில் இரண்டு அலுவலக கட்டங்கள் தீப்பிடித்து சேதம் அடைந்தன. டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்தது.

இந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்ற போதும் மாஸ்கோ முழுவதும் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில் உக்ரைன் பலம் பெற்றுள்ளதாக ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா யுத்தம் தொடங்கி 522 நாட்களான நிலையில் யுத்தக் களத்தில் ரஷ்யா திவாலாகி விட்டது என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

இன்னும் ஓரிரு வாரங்களில் ரஷ்யாவின் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments