நகை வாங்க பேருந்தில் சென்ற தம்பதியிடம் கைவரிசை.. இரண்டரை லட்சம் ரூபாயை திருடிய பெண்கள் கைது.. !!

0 1608

சென்னையில் மாநகரப் பேருந்தில் நகை வாங்கச் சென்ற தம்பதியிடம், இரண்டரை லட்சம் ரூபாயைத் திருடிவிட்டு தப்பியோடிய இரண்டு பெண்களை மயிலாடுதுறையில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த விஜயகுமார், தனது மனைவியுடன் கடந்த 16 ஆம் தேதி தியாகராயர் நகருக்குச் சென்றபோது இந்த கொள்ளை நடந்தது.

இது குறித்த புகாரின்பேரில் விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசார், அவர்கள் பயணித்த வழித் தடத்தில் இருந்த சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் மாம்பலம் பேருந்து நிறுத்தத்தில், அந்தப் பேருந்தில் ஏறிய இரண்டு பெண்கள், விஜயகுமாரின் மனைவி அருகில் சென்று, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடியது தெரிய வந்தது.

கவிதா, ரேகா என்ற அவர்களை, மயிலாடு துறையில் பதுங்கி இருந்தபோது போலீசார் கைது செய்துள்ளார்கள். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதும் வழிப்பறிகளில் கை தேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments