கடைக்காரரை கத்திமுனையில் மிரட்டி ரூ.16 லட்சம் பறிப்பு... 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பணப் பையுடன் தப்பியோட்டம்...!

0 2101

திருப்பூரில் கடைக்குப் பொருட்கள் வாங்குவது போல சென்ற 7 பேர் கும்பல், கடை உரிமையாளரை, கத்தி முனையில் மிரட்டி, 16 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த அனுமத் சிங் என்பவர் மத்தியப் பேருந்து நிலையம் பகுதியில் வீட்டு உபயோகப் பொருள் கடை நடத்தி வருகிறார்.

நேற்றிரவு இவரது கடைக்குள் திடீரென புகுந்த அந்த கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டி 16 லட்சம் ரொக்கம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அனுமந்த் சிங் அளித்த புகாரின்பேரில், அப்பகுதியிலுள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அந்த கும்பல் சாலையில் ஒடிச் சென்று காரில் ஏறி தப்பிச் சென்றது தெரிய வந்தது.

பின்னர் அந்த கார் பல்லடம் சாலையில் நிறுத்தப் பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார், காரின் உரிமையாளர் சக்திவேலை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments