சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது..!

திருச்சி மாநகர் கருமண்டபம் அருகே மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிங்கராயர் நகர் பகுதியில் கடந்த 19 ஆம் தேதி அன்று ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் அந்த ஸ்பா முழுவதும் உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஸ்பா மேலாளர் லட்சுமி தேவி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் விஜய் மக்கள் இயக்கத்தில் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்து வரும் வயலூரைச் சேர்ந்த செந்தில் என்பவர் இதன் உரிமையாளர் என்பது தெரிய வந்தது
Comments