இங்கிலாந்தில் பொழுதுபோக்குப் பூங்காவில் 70 அடி உயரத்தில் சிக்கிய ரோலர் கோஸ்டர்.. வெளியேற முடியாமல் அந்தரத்தில் தொங்கிய சுற்றுலாப் பயணிகள்..!

இங்கிலாந்தில் பொழுதுபோக்குப் பூங்காவில் இயந்திரப் பழுது காரணமாக ரோலர் கோஸ்டர் 70 அடி உயரத்தில் நின்றதால் சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் தவிப்புக்கு ஆளாகினர்.
எஸக்ஸ் பகுதியில் உள்ள அட்வென்சர் ஐலேண்ட் என்ற பொழுதுபோக்குப் பூங்காவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரோலர் கோஸ்டரில் 8 வயது சிறுமி உள்பட 8 பேர் இருந்ததாகவும், விபத்து நேரிட்டபோது சுமார் 40 நிமிடங்கள் அந்தரத்தில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
Comments